TNPSC Thervupettagam

திருச்சி உலர் துறைமுகத் திட்டம்

September 3 , 2026 10 days 87 0
  • திருச்சியில் பன்முக சரக்குப் போக்குவரத்து மையத்தை (MMLH/உலர் துறைமுகம்) அமைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளன.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) விரைவில் இதற்கான பொருத்தமான இடத்தைக் கண்டறிந்து திட்ட முன்மொழிவைத் தயாரிப்பதற்கான விரிவான ஆய்வைத் தொடங்கவுள்ளது.
  • இந்த உலர் துறைமுகம் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில்துறைகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளுதல், கிடங்கு வசதி, குளிர்பதனச் சங்கிலி, சரக்கு வாகன முனையம், சரக்கு ஒருங்கிணைப்பு, விநியோகம் மற்றும் சுங்க அனுமதி வசதிகளை வழங்கும்.
  • இந்த வசதியானது போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல் செலவுகளைக் குறைப்பதுடன், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள முக்கிய துறைமுகங்களுடனான இணைப்பை மேம்படுத்தும்.
  • தமிழ்நாட்டின் சென்னை, காமராஜர், காட்டுப்பள்ளி மற்றும் வ.உ.சி தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களும், கேரளாவின் கொச்சி மற்றும் விழிஞ்ஞம் ஆகிய துறைமுகங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்