தமிழக முதலமைச்சர் மாநிலத்தில் புதிய தொழில் திட்டங்களை அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்காட் (தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்) மூலம் ரூ.175 கோடி மதிப்பில் குறைக்கடத்தி மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் ரூ.400 கோடி மதிப்பில் டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்) மூலம் கோயம்புத்தூர் ஃபின்டெக் மையம் (FinTech Hub) அமைக்கப்படவுள்ளது.
தொழில்துறைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவளிக்கும் வகையில் திருச்சி மண்டலத்தில் பன்முக சரக்குப் போக்குவரத்து மையம் (Multi-Modal Logistics Hub) அமைக்கப்படவுள்ளது.
மாநிலத்தின் தொழில் மற்றும் மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிக்கல்/மீஉயர்அழுத்த அனல் மின் நிலையம் அமைக்கப் படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.