TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் அமிர்த பாரத் நிலையத் திட்டம்

October 15 , 2026 7 days 127 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று தமிழ்நாட்டில் மறுசீரமைக்கப்பட்ட ஐந்து ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததன் மூலம் மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் உள்ள 77 நிலையங்களில் மொத்தம் 26 நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
  • அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பழனி (திண்டுக்கல்), நாமக்கல் (நாமக்கல்), பரமக்குடி (ராமநாதபுரம்) மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் (வேலூர்) ஆகியவையே அந்த ஐந்து ரயில் நிலையங்களாகும்.
  • அமிர்த பாரத் நிலையத் திட்டம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்திய தேசிய இணையதளத்தின்படி, அமிர்த பாரத் நிலையத் திட்டமானது நாடு முழுவதும் 1,309 நிலையங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட கால மறுசீரமைப்புத் திட்டமாகும்.
  • இது பயணிகள் வசதிகள், அணுகல்தன்மை, தூய்மை மற்றும் பன்முக இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்