TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் இணையவழி ஆவண பதிவு முறை

June 10 , 2026 4 days 170 0
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான இணையவழி அமைப்பை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது, இதன் மூலம் மக்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் பதிவு செயல்முறையை முடிக்க முடியும்.
  • ஆவணப் பதிவை எளிதாக்கவும், சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்வதைக் குறைக்கவும், பதிவுத்துறை 24×7 இணையவழிப் பதிவு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இந்த வசதியானது மனைகளின் முதல் விற்பனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைப் பத்திரங்கள் மற்றும் வங்கிக் கடன்கள் தொடர்பான அடமான மற்றும் மீட்புப் பத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • சார்பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்டவுடன், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; மேலும் பதிவு செய்யப் பட்ட அலைபேசி எண்ணுக்கு புலனம்/வாட்ஸ்அப் மூலமாகவும் ஆவணங்கள் பகிரப்படும்.
  • கைரேகை அல்லது கருவிழி அங்கீகாரம் மூலம் ஆவணம் எழுதித் தருபவர்கள், உரிமை கோருபவர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; மேலும் எதிர்காலத்தில் இணையவழி முறையை முழுமையாக கட்டாயமாக்க துறை திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்