May 18 , 2026
3 days
97
- தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் காற்று ஆற்றல் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு சுமார் 10,000 மெகாவாட் (MW) நிறுவப்பட்ட திறனுடன், இந்தியாவில் காற்று ஆற்றலை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
- மாநிலத்தில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் உச்ச காற்று காலம் தொடங்குகிறது.
- 2026 ஆம் ஆண்டில் காற்று மின் உற்பத்தி மாநிலத்தின் உச்ச உற்பத்தித் திறனை விட குறைந்தது 5% குறைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- வானிலை நிலவரங்கள் மற்றும் எல் நினோ விளைவு போன்ற காரணிகள் இந்த ஆண்டு காற்று ஆற்றல் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

Post Views:
97