தமிழ்நாட்டில் பதிவான உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் 2024
November 29 , 2025 6 days 89 0
2024 ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 240 உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 268 உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதோடுஇது இம்மாநிலத்தில் இது வரை பதிவாகாத அதிகபட்சம் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,128 உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் இருந்தனர்.
உயிரிழந்த உறுப்பு கொடையாளர்களில் தமிழ்நாடு (268), தெலுங்கானா (188), மகாராஷ்டிரா (172), கர்நாடகா (162), மற்றும் குஜராத் (119) ஆகிய ஐந்து மாநிலங்கள் 80% பங்களித்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1,446 உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) ஆனது உறுப்பு தானத் திட்டத்தை நிர்வகிக்கிறது மற்றும் வெளிப்படையான உறுப்பு ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பேணுகிறது.