ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள ஜெயராமபுரத்தில் 18 ஆம் நூற்றாண்டின் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் முழு அளவிலான சிலையைக் கொண்ட நினைவு அரங்கத்தை தமிழக முதல்வர் M.K. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொல்லான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நம்பகமான தளபதியாக இருந்தார்.
பொல்லான் தீரனின் இராணுவ மற்றும் உளவுப் படைகளில் பணியாற்றினார்.
1801 ஆம் ஆண்டில் பவானியில் காவிரி ஆற்றங்கரையில் நடந்த போர், 1802 ஆம் ஆண்டில் சென்னிமலைப் போர், மற்றும் 1803 ஆம் ஆண்டில் அரச்சலூர் போர் ஆகிய மூன்று போர்களில் ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்க தீரன் சின்னமலைக்கு அவர் உதவினார்.
ஓடாநிலை கோட்டையில் தீரன் சின்னமலையைக் கைப்பற்ற கர்னல் ஹாரிஸ் திட்டமிட்டார்.
இருப்பினும், பொல்லான் முன்னதாகவே தீரனுக்குத் தகவலைத் தெரிவித்து கோட்டையிலிருந்து தப்பிச் செல்லுமாறு அவரை அறிவுறுத்தினார்.
பொல்லானின் உளவுத் துறையில் அவரது ஈடுபாட்டைக் கண்டறிந்த பிறகு, கர்னல் ஹாரிஸ் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
நீண்ட தேடலுக்குப் பிறகு, 1805 ஆம் ஆண்டு தமிழ் மாத ஆடி முதல் நாளில் ஓடாநிலை கோட்டைக்கு அருகிலுள்ள ஜெயராமபுரத்தில் கர்னல் ஹாரிஸ் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தால் அவர் சுட்டுக் கொல்லப் பட்டார்.