TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மலேரியா ஒழிப்பு

January 16 , 2026 6 days 68 0
  • தமிழ்நாடு மாநிலமானது, கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களில் எந்தப் பாதிப்பும் பதிவாகாததுடன் மலேரியாவை ஒழிக்கும் ஒரு தருவாயில் உள்ளது.
  • மாநிலத்தின் மலேரியா பாதிப்புகளில் 37%-45% பங்குடன் சென்னை, இராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு மற்றும் சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்னும் மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டில் 5,587 ஆக இருந்த மலேரியா பாதிப்புகள் 2025 ஆம் ஆண்டில் 321 ஆகக் குறைந்துள்ளதோடு சென்னையில் 2023 ஆம் ஆண்டில் 173 ஆக இருந்த மலேரியா பாதிப்புகள் 2025 ஆம் ஆண்டில் 121 ஆகவும் குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் பதிவான 384 பாதிப்புகளில் 330, 2024 ஆம் ஆண்டில் பதிவான 347 பாதிப்புகளில் 208 மற்றும் 2025 ஆம் ஆண்டில் பதிவான 321 பாதிப்புகளில் 203 என சமீபத்திய ஆண்டுகளில் பதிவான பெரும்பாலான மலேரியா பாதிப்புகள் உள்ளூர்ப் பரவலுக்குப் பதிலாக வேறொரு இடத்தில் இருந்து பரவியவையாகும்.
  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் இரத்தப் பரிசோதனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) மற்றும் அரசு மருத்துவ மனைகளில் (GHs) காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்தல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்காணித்தல் மூலம் கண்காணிப்பை மேற்கொள்கிறது.
  • வருடாந்திர ஒட்டுண்ணிப் பாதிப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்பதோடு மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மலேரியா தொற்று எதுவும் பதிவாக வில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்