TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் TNRERA மறுசீரமைப்பு

October 23 , 2026 16 hrs 0 min 42 0
  • தமிழ்நாடு நில மனை ஒழுங்குமுறை ஆணையத்தை (TNRERA) தமிழ்நாடு அரசு மறு சீரமைத்து, அதன் தலைவராக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி கே. பணீந்திர ரெட்டியை நியமித்துள்ளது.
  • TNRERA என்பது தமிழ்நாட்டில் நில மனைச் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016 ஐச் (RERA) செயல்படுத்துவதற்குப் பொறுப்பான மாநில அளவிலான ஆணையமாகும்.
  • இது நில மனைத் துறையை ஒழுங்குபடுத்துகிறது, வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கிறது மற்றும் நில மனைத் திட்டங்கள் மற்றும் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கிறது.
  • ஓய்வு பெற்ற அதிகாரிகளான ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் மைதிலி கே. ராஜேந்திரன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ். கிருபாகரன் மதுரம் மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர் கே.பி. சத்தியமூர்த்தி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • TNRERA மறுசீரமைக்கப்படும் வரை அல்லது ஆறு மாதங்களுக்கு என இதில் எது முன்னதோ அதுவரை ஆணையத்தை அரசு முன்னதாக முடக்கி வைத்திருந்தது, இக்காலத்தில் கே. பணீந்திர ரெட்டி தலைவராகப் பணியாற்றினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்