TNPSC Thervupettagam

தரங்கா மலைக்குன்றுகள்-அம்பாஜி-அபு சாலை மற்றும் இரயில் பாதை

July 17 , 2022 1118 days 449 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 116.65-கி.மீ. நீளம் கொண்ட தரங்கா மலைக்குன்றுகள்-அம்பாஜி-அபு என்ற சாலை இரயில் பாதையை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
  • இது இரண்டு மாநிலங்களையும் மூன்று வழிபாட்டுத் தலங்களையும் இணைக்கும்.
  • இந்த இரயில் பாதையானது அம்பாஜிக்கு எளிதான முறையில் பயணம் மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரு பாதையினை வழங்கும்.
  • தரங்கா மலையில் அஜித்நாத் (24 தீர்த்தங்கரர்களில் ஒருவர்) என்ற சமணக் கோவில் அமைந்துள்ளது.
  • இந்தப் பாதையானது ராஜஸ்தானில் உள்ள சிரோஹி மாவட்டம் மற்றும் குஜராத்தில் உள்ள சபர்கந்தா, மகேசனா & பனஸ்கந்தா ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும்.
  • இது தற்போதுள்ள அகமதாபாத்-அபு சாலை மற்றும் இரயில் பாதைக்கு ஒரு மாற்றுப் பாதையாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்