இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ‘தர்மா கார்டியன்’ என்ற முதல் கூட்டு ராணுவப் பயிற்சி 2018 நவம்பர் 1 முதல் 14 வரை மிசோரமின் வைரங்டேயில் நடைபெறவுள்ளது.
இது இரு நாடுகளின் இராணுவத்திற்குமிடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் உலகளாவிய பயங்கரவாத நிகழ்வுகளை கண்காணிப்பதற்கும் இது உதவுகிறது.