உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி உலகிலேயே மிகவும் மன அழுத்தமுடைய நாடாக இந்தியா உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன.
2015-2016 தேசிய மன நல ஆரோக்கிய ஆய்வின்படி (NMHS - National Mental Health Survey) குறைந்தபட்சம் 6.5% இந்திய மக்கள் ஏதேனும் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சராசரி தற்கொலை விகிதமானது ஒரு லட்சம் மக்களுக்கு 10.9 என்ற அளவில் உள்ளது. உலக அளவில் மன அழுத்தமானது 2005 லிருந்து 2015 வரை 18% உயர்ந்துள்ளது.
உலகளாவிய குறைபாடுகளில் மன அழுத்தமானது மிகப்பெரிய ஒற்றைப் பங்களிப்பாளராக WHO-ஆல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.