கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் லேடி இர்வின் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
October 20 , 2018 2463 days 951 0
மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (DAY-NRLM/ Deendayal Antyodaya Yojana - National Rural Livelihood Mission) ஆனது லேடி இர்வின் கல்லூரியுடன் “ரோஷினி” அமைப்பை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ரோஷினி என்பது பெண்கள் குழுவிற்கான சமூக நடவடிக்கை மையமாகும். இது தொழில்நுட்ப ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் யுனிசெப் என்ற அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.