TNPSC Thervupettagam

உலகளாவிய போட்டித்திறன் குறியீடு 2018

October 20 , 2018 2463 days 777 0
  • 2018-க்கான உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் (GCI 4.0 - Global Competitiveness Index) இந்தியாவானது 58வது இடத்தில் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக உள்ளது.
  • GCI 4.0 ஆனது பொருளாதாரத்தின் உற்பத்தி நிலையை நிர்ணயிக்கும் காரணிகள் மூலம் போட்டித்திறனை மதிப்பீடு செய்கிறது.
  • இந்தியாவின் மதிப்பானது 2017ன் நிலையை விட 5 இடங்கள் முன்னேறியுள்ளது. இது G20 நாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
  • 140 பொருளாதாரங்களையுடைய பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தையும் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி முறையே 2வது மற்றும் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • BRICS பொருளாதாரங்களில் சீனா 28வது இடத்தைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது. ஆயினும் தெற்காசியாவின் “முக்கிய உந்து சக்தியாக” இந்தியா தொடர்கிறது. உலகப் பொருளாதாரமானது 2018 - 2019 கால அளவில் சுமார் 4% உயரும் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்