வாய்வழி மீள் நீரேற்றக் கரைசல் (ORS) என்று தவறாகப் பெயரிடப்பட்ட பானங்களை அகற்ற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) உத்தரவிட்டது.
ORS என்பது வயிற்றுப்போக்கு அல்லது அதிகப்படியான வியர்வையால் ஏற்படும் நீரிழப்பைக் குணப்படுத்த குளுக்கோஸ் மற்றும் உப்புகளின் துல்லியமான கலவையைக் கொண்ட மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பானமாகும்.
சரியான குளுக்கோஸ் மற்றும் உப்புச் சமநிலையுடன் கூடிய WHO அமைப்பால் அங்கீகரிக்கப் பட்ட ORS சூத்திரங்களுக்கு மட்டுமே “ORS” பெயரை பயன்படுத்த முடியும்.
பழச்சாறுகள் மற்றும் ஆற்றல் பானங்கள் உள்ளிட்ட தவறாகப் பெயரிடப்பட்ட பானங்கள், குறிப்பாக குழந்தைகளில் நீரிழப்பை மோசமாக்கும்.