TNPSC Thervupettagam

தாத்ரா - நாகா் ஹவேலி மற்றும் டாமன் - டையூ (ஒன்றியப் பிரதேசங்கள் இணைப்பு) மசோதா, 2019

December 14 , 2019 1986 days 1173 0
  • இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப் படுத்தினார்.
  • இந்த மசோதாவானது தாத்ரா - நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையு ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களை ஒரே ஒன்றியப் பிரதேசமாக ஒன்றிணைக்க அனுமதிக்கின்றது.
  • சிறப்பான நிர்வாகத்திற்காகவும் பல்வேறு பணிகளின் மிகுதல் தன்மையை (இரட்டிப்பாதல் / duplications) சரி பார்க்கவும் இந்த இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட இருக்கின்றன.
  • இந்த இணைப்புடன் சேர்த்து, தற்போது இந்தியாவில் மொத்தம் எட்டு ஒன்றியப் பிரதேசங்கள் இருக்கும்.

அரசியலமைப்பின் திருத்தம்

  • இந்த மசோதாவானது தாத்ரா - நாகா் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களை ஒன்றிணைப்பதற்கு முதலாவது அட்டவணையைத் திருத்துகின்றது.
  • இந்த மசோதாவானது இணைக்கப்பட்ட இந்த ஒன்றியப் பிரதேசத்திற்கு மக்களவையில் இரண்டு இடங்களை ஒதுக்க நான்காவது அட்டவணையில் திருத்தம் செய்ய முயல்கின்றது.
  • உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு: மும்பை உயர் நீதிமன்றமானது இந்த இணைக்கப்பட்ட ஒன்றியப் பிரதேசத்திற்கான உயர் நீதிமன்றமாக தொடர்ந்து செயல்படும்.
  • ஒன்றியப் பிரதேசங்களின் கீழ் உள்ள பணிகள்: தற்போதுள்ள ஒன்றியப் பிரதேசங்களின் விவகாரங்கள் தொடர்பாகப் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் இந்த இணைக்கப்பட்ட ஒன்றியப் பிரதேசத்திற்குத் தற்காலிகமாகப் பணியாற்றுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்