ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சித்தூரில் தாய்மடித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு (அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கிய) பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்கள் ஆண்டிற்கு ரூ. 15,000 நிதியுதவியைப் பெற இருக்கின்றனர்.
இருப்பினும், குழந்தையின் பாதுகாவலர் அல்லது அக்குழந்தையின் தாய் அந்த மாணவர்களின் 75% பள்ளி வருகையை உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் மாநில அரசு ரூ. 6318 கோடியை ஒதுக்கியுள்ளது.
குழந்தைகள் 12 ஆம் வகுப்பை முடிக்கும் போது இந்தத் தொகையானது நேரடியாக அக்குழந்தையின் தாய்மார்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட இருக்கின்றது.