TNPSC Thervupettagam

தாலேட்டுகள் – இருதயக் குழாய் நோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள்

May 18 , 2025 3 days 30 0
  • உலகளவில் 2018 ஆம் ஆண்டில் 55 முதல் 64 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே இருதயம் சார்ந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு தாலேட்டுகள் முக்கியப் பங்களிப்புக் காரணியாக உள்ளன.
  • இந்தச் செயற்கை இரசாயனங்களானது, உணவுச் சேமிப்பு கொள்கலன்கள், ஷாம்பு, ஒப்பனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்ற நுகர்வோர் பொருட்களில் காணப்படுகின்றன.
  • நெகிழிப் பொருட்களை மேலும் நெகிழ்வு தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் டை-2-எத்தில்ஹெக்ஸைல் தாலேட் (DEHP) என்ற ஒரு வேதிப் பொருளானது இருதய நோய் சார்ந்த உயிரிழப்புகளுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
  • 55 முதல் 64 வயதுடையவர்களில் சுமார் 103,587 உயிரிழப்புகளுடன், உலகளவில் DEHP காரணமாக ஏற்பட்ட இருதய நோய் சார்ந்த உயிரிழப்புகளானது, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
  • ஒரு முக்கிய நெகிழி உற்பத்தியாளரும் நுகர்வோருமான சீனாவில், இது போன்ற 33,858 உயிரிழப்புகளைப் பதிவாகியுள்ளதுடன், சுமார் 52,219 உயிரிழப்புகளைக் கொண்ட அளவில் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக அது மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்