TNPSC Thervupettagam

காம்பர்ட்சேவ் மலைகள்

May 17 , 2025 4 days 34 0
  • காம்பர்ட்சேவ் மலைகள் அளவிலும் வடிவத்திலும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைகளைப் போலவே உள்ளன.
  • அவை கிழக்கு அண்டார்டிகா பனிப்படலத்தின் மிக உயரமான இடத்திற்கு அடியில் புதையுண்டுள்ளன.
  • தற்போது கிழக்கு அண்டார்டிகாவை உள்ளடக்கிய கண்ட மேலோடு ஆனது, சுமார் 700 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையான குறைந்தது இரண்டு பெரிய கண்டங்களிலிருந்து உருவானதாக கண்டத் தட்டுகளின் நகர்வு மாதிரிகள் தற்போது தெரிவிக்கின்றன.
  • சிர்கான் படிகங்களின் முக்கியப் பகுப்பாய்வின்படி, காம்பர்ட்சேவ் மலைகள் சுமார் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேலெழும்பத் தொடங்கி சுமார் 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இமயமலை உயரத்தை எட்டின.
  • பின்னர் அது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த ஆழமான கண்ட மேலோடு உருகுதல் மற்றும் ஓட்டத்தை எதிர் கொண்டன.
  • இவற்றின் படிக அமைப்பில் மிகக் குறைந்த அளவு யுரேனியம் இருப்பதால், இந்தச் சிர்கான்கள் பெரும்பாலும் "தகவல் தொகுப்பு” (time capsules) என்று அழைக்கப் படுகின்றன.
  • இதில் யுரேனியமானது அறியப்பட்ட ஒரு விகிதத்தில் சிதைவடைவதால், அறிவியல் ஆய்வாளர்கள் அவற்றின் காலக் கட்டத்தினை மிகத் துல்லியமாகத் தீர்மானிக்க வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்