இந்த அறிக்கையானது 2018 ஆம் ஆண்டிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையில் நடத்தப்பட்ட மிக விரிவான நெகிழிக் கழிவுகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் வாரியான கழிவுகளின் தணிக்கைகளை ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்டது.
2024 ஆம் ஆண்டில், நேபாளம் மற்றும் பூடான் ஆகியவை இந்த ஒரு முன்னெடுப்பில் இணைந்தன.
இந்தப் பகுதியில் உள்ள நெகிழிக் கழிவுகளில் 80 சதவீதமானது ஒற்றைப் பயன்பாட்டு உணவு மற்றும் பான பெட்டிகள் காரணமாக உருவாகும் கழிவாகும்.
இந்தக் கழிவுகளில் 70 சதவீதமானது மறு சுழற்சி செய்ய முடியாத அல்லது மாற்றுச் சந்தை மதிப்பு இல்லாத நெகிழிப் பொருட்களை உள்ளடக்கியதாகும்.
மொத்தக் கழிவுகளில் சுமார் 18.5 சதவீதம் மட்டுமே பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) போன்ற மறு சுழற்சி செய்யக் கூடிய நெகிழிகளால் ஆனது.
86 தளங்களில் இருந்து 53,814 கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் தூய்மையாக்கத்தில் சிக்கிம் முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது.
மொத்த நெகிழிக் கழிவுகளில் பல் அடுக்கு நெகிழிகள் (MLP) 68.5 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் PET சுமார் 18.5 சதவீதமாகவும், LDPE சுமார் 5.4 சதவீதமாகவும், HDPE ஒரு சதவீதமாகவும் இருந்தது.