அரசாங்கம் 'திடக் கழிவு மேலாண்மை விதிகள், 2026'-ஐ அறிவித்துள்ளது, இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
இந்த விதிகள் 2016-ஆம் ஆண்டின் விதிகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளன மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986'-இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
கழிவுகளை அதன் ஆதாரத்திலேயே நான்கு பிரிவுகளாக (ஈரமான, உலர்ந்த, சுகாதாரமான மற்றும் சிறப்புக் கழிவுகள்) பிரிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இந்த விதிகள் வட்டப் பொருளாதாரம், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) மற்றும் 'மாசுபடுத்துபவரே பணம் செலுத்த வேண்டும்' போன்ற கொள்கைகளைப் பின்பற்றுகின்றன.
விதிகளை மீறுவோருக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்படும்; இது மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களால் கண்காணிக்கப்படும்.
அதிக அளவு கழிவுகளை உருவாக்குபவர்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, கழிவுகளை முறையாகச் சேகரித்தல் மற்றும் அகற்றுவதற்குப் பொறுப்பாக்கப் பட்டு உள்ளனர்.
கழிவுகள் உருவாக்கம் முதல் அகற்றப்படுவது வரையில் கண்காணிக்க ஒரு மையப் படுத்தப் பட்ட இணையவழித் தளம் உருவாக்கப்படும்.
தொழிற்சாலைகளில் கழிவுகளிலிருந்து பெறப்படும் எரிபொருளை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குப்பைக் கிடங்குகளில் கழிவுகளைக் கொட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதுடன் பழைய குப்பைக் கிடங்குகளை உயிரிச் சுரங்கம் மற்றும் உயிரிச் சீரமைப்பு மூலம் சீரமைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.