திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் – கலைப்பு
April 11 , 2021 1556 days 623 0
இந்திய அரசானது ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (Film Certificate Appellate Tribunal - FCAT) கலைத்து உள்ளது.
தீர்ப்பாயங்கள் சீர்திருத்தங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் சேவை விதிமுறைகள்) அவசரச் சட்டம், 2021 என்ற சட்டமானது திரைப்படச் சட்டம், 1952 என்ற சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.
இச்சட்டம் அந்தச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்கி மற்ற பிரிவுகளில் ”தீர்ப்பாயம்” எனும் வார்த்தையை விடுத்து ”உயர்நீதிமன்றம்” எனும் வார்த்தையை அதனுள் உள் நுழைத்து அச்சட்டத்தைத் திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (Central Board of Film Certification - CBFC) சான்றிதழை எதிர்த்து வழக்கிட வேண்டுமென்றாலோ அல்லது சான்றிதழ் தரவில்லை என்றாலோ திரைப்படத் தயாரிப்பாளர்கள் இனி உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.