இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக மாற உள்ளார்.
முர்முவின் வேட்பு மனுவைப் பாஜக தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார்
இவர் ஒடிசாவைச் சேர்ந்த சந்தால் இனப் பெண் ஆவார்.
இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுப் பெற்ற நபரான பிரதிபா பாட்டீலைத் தொடர்ந்து (2007-12) குடியரசுத் தலைவர் பதவியை வகிக்க உள்ள இரண்டாவது பெண் முர்மு ஆவார்.