சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 2022 ஆம் ஆண்டிற்கான ‘யோகாவின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புக்கான சிறந்த பங்களிப்பிற்கான பிரதம மந்திரி விருதை’ வழங்க உள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
லடாக்கைச் சேர்ந்த பிக்கு சங்கசேனா, பிரேசிலைச் சேர்ந்த மார்கஸ் வினிசியஸ் ரோஜோ ரோட்ரிக்ஸ் ஆகிய இரு தனி நபர்கள் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “தி டிவைன் லைஃப் சொசைட்டி” என்ற அமைப்பு மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தினைச் சேர்ந்த பிரிட்டிஷ் வீல் ஆஃப் யோகா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.