ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்திய 36வது மாநிலமாக அசாம் மாறியது.
இதன் மூலம், இந்தத் திட்டமானது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டமானது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் செயல்படுத்தப் படுகிறது.
இது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
இது ஆதார் தகவல் உள்ளீடு எனப்படும் செயல்முறையின் மூலம் பயனாளியின் குடும்ப அட்டையினைத் தேசியமயமாக்கும் ஒரு திட்டமாகும்.
பயனாளிகள் நாட்டின் எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் தாங்கள் பெற தகுதியான உணவுத் தானியங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஆதார் தகவல் உள்ளீடு உறுதி செய்கிறது.