TNPSC Thervupettagam

திறந்தநிலைப் பாறை அருங்காட்சியகம்

January 9 , 2022 1220 days 759 0
  • மத்திய அறிவியல்  மற்றும் தொழில்நுட்பம் &  புவி அறிவியல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது திறந்தநிலைப் பாறை அருங்காட்சியகத்தினைத் திறந்து வைத்தார்.
  • இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 35 வெவ்வேறு வகைப் பாறைகள் காட்சிப் படுத்தப்படுகின்.
  • இந்தப் பாறைகளின் வயதானது சுமார் 3.3 பில்லியன் வருடங்கள் முதல் 55 மில்லியன் வருடங்கள் வரை இருக்கும்.
  • இந்தப் பாறைகள் புவிப் பரப்பிலிருந்து 174 கி.மீ. ஆழத்தில் உள்ள புவியின் ஆழமானப் பகுதிகளின் ஒரு பிரதி பிம்பமாக உள்ளன.
  • இந்த அருங்காட்சியகமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திறக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்