இந்திய அரசானது பசுமை ஆற்றல் வழித்தடக் கட்டமைப்புப் பணியின் 2வது கட்டப் பணிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
2வது கட்டப் பணிகளில் 10,750 கி.மீ. தூரத்திற்கு இரயில் போக்குவரத்து வழித்தடங்கள் கட்டமைக்கப்பட்டு அதனுடன் 27,500 மெகா வோல்ட் ஆம்பியர் திறனுள்ள துணைமின் நிலையங்களும் சேர்க்கப்பட உள்ளன.
இத்திட்டமானது 7 மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
அவையாவன உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியன ஆகும்.
பசுமை ஆற்றல் வழித்தடக் கட்டமைப்புப் பணிகளின் இரண்டாம் கட்டப் பணிகள் 2021-22 முதல் 2025-26 வரையில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கான செலவில் 33% பங்கினை மத்திய அரசு வழங்கும்.
இது 2030 ஆம் ஆண்டிற்குள் 450 GW திறனுடைய ஆற்றல் உலைகளை நிறுவ வேண்டும் எனும் இந்தியாவின் இலக்கினை அடைவதற்கு உதவும்.