மத்தியத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகமானது ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து திறன் கட்டமைப்புத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
டிஜிட்டல் தளமான “MyInnerGenius” மூலம் அறிவார்ந்தத் திறன்கள் மற்றும் ஆளுமை பற்றிய தனிப்பட்ட மதிப்பீட்டை மாணவர்களுக்கு வழங்க இருக்கின்றது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐபிஎம் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க்கிங் (வலையமாக்கம்) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் (மேகக் கணினி) ஆகிய துறைகளில் இரண்டு ஆண்டு மேம்பட்ட டிப்ளமா (பட்டயப் படிப்பு) படிப்பானது தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்கள் (Industrial Training Institutes - ITIs) மற்றும் தேசியத் திறன் பயிற்சி நிறுவனங்கள் (National Skill Training Institutes - NSTIs) ஆகியவற்றில் வழங்கப்பட இருக்கின்றது.
இந்தத் தளமானது செயற்கை நுண்ணறிவில் திறன்களை வளர்ப்பது குறித்து ITIs மற்றும் NSTIs ஆகிய நிறுவனங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.