இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் சுங்கத் துறை அனுமதியளிப்பை மேம்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ICEDASH மற்றும் ATITHI ஆகிய இரண்டு புதிய தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த முன்னெடுப்புகளானது இந்தியாவிற்கு வரும் சர்வதேசப் பயணிகளின் பயண உடைமைகள் மற்றும் நாணய அறிக்கைகளை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கும் உதவ இருக்கின்றது.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் மூலம் ICEDASH வலைதளத்தை அணுக முடியும்.
ATITHI என்பது சர்வதேசப் பயணிகளின் சுங்க அறிவிப்பை முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கான ஒரு கைப்பேசிச் செயலியாகும்.