திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் முதலாவது சிறப்புமிகு மையம்
December 24 , 2020 1612 days 560 0
சமீபத்தில் திறன்மிகு இந்திய கழகமானது மின்துறையில் திறன் மேம்பாட்டிற்காக ஒரு சிறப்புமிகு மையத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மையமானது ஹரியானாவின் குருகிராமில் உள்ள தேசிய சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி மையத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையமானது மத்தியத் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சகம், பிரான்சு அரசின் தேசியக் கல்வித் துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் ஸ்னேய்டர் மின்உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.