TNPSC Thervupettagam

திறன் விளைவுகள் நிதித் திட்டம்

April 13 , 2026 5 days 125 0
  • இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக திறன் விளைவுகள் நிதியை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தை இந்திய அரசு தொடங்கி ள்ளது.
  • இது நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட பின்னணியில் உள்ள இளைஞர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிதியானது, வேலைவாய்ப்பு மற்றும் பணியில் நீடித்திருத்தல் போன்ற சரி பார்க்கப்பட்ட வேலை முடிவுகளுடன் நிதி உதவியை இணைக்கும் 'விளைவு அடிப்படையிலான நிதியளிப்பு' (OBF) முறையைப் பயன்படுத்துகிறது.
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (NSDC) இது வழிநடத்தப்படும்.
  • இது அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியை ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பு நிதி மாதிரியைப் பின்பற்றுகிறது.
  • இது வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக திறன் தாக்கப் பத்திரம் (2021) பெற்ற வெற்றியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்