தில்லிப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான யோகேஷ் தியாகி அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிய ஒரு ஆணையின் மூலம் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
மேலும் குடியரசுத் தலைவர் அவர்கள், கல்வித் துறை அமைச்சகத்தினால் இவர் மீது சுமத்தப்பட்ட “தவறான நடத்தை” மற்றும் “பணியில் கடமை தவறுதல்” ஆகியவை குறித்து இவர் மீது விசாரணை நடத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.
யோகேஷ் தியாகி அவர்கள் 2016 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று தில்லி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப் பட்டார்.