TNPSC Thervupettagam

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்டத் திருத்தம்

September 6 , 2026 7 days 80 0
  • தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்டம், 2025-ஐ திருத்துவதற்கான மசோதா 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று அரசிதழ் அறிவிப்பின் மூலம் இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) அதனை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, இந்திய தேசிய கட்டடக் குறியீடு, 2016-க்கான குறிப்புகளை நீக்க இந்த மசோதா வகை செய்கிறது.
  • தீயணைப்பு மற்றும் கட்டட விதிமுறைகளை நவீனப்படுத்துவதற்கான வணிக சீர்திருத்த செயல் திட்டத்தின் (BRAP), 2026 பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
  • தேசிய கட்டடக் குறியீட்டிற்கான குறிப்புகளுக்குப் பதிலாக தீயணைப்பு மற்றும் கட்டட விதிகளுக்கான தாராளமயமாக்கப்பட்ட மற்றும் நவீன தரநிலைகளை இது முன் மொழிகிறது.
  • முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தமானது, கட்டுமான அனுமதி மற்றும் கட்டட விதிமுறைகள் தொடர்பான 2026 ஆம் ஆண்டு வணிகச் சீர்திருத்த செயல் திட்டத்தின் (BRAP) பரிந்துரைகளுடன் தமிழ்நாட்டின் தீயணைப்பு மற்றும் கட்டடச் சட்டங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்