TNPSC Thervupettagam

தீர்வு காணும் மையத் திட்டம்

May 29 , 2021 1520 days 2874 0
  • மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது 9 நாடுகளில் 10 தூதரகத் திட்டங்களின் கீழ் One Stop Centre எனும் தீர்வு காணும் மையங்களை (One Stop Centre Scheme – OSC) அமைக்க உள்ளது.
  • இது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத்  தடுப்பதற்காக  அமைக்கப்படும்.
  • குவைத், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், கனடா, ஆஸ்திரேலியா  மற்றும் ஆகிய ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தீர்வு காணும் மையமானது அமைக்கப் படும்.
  • சவுதி அரேபியாவில் இரணடு மையங்கள் அமைக்கப்படும்.
  • மேலும் இந்தியா முழுவதும் 300 மையங்கள் அமைக்கப் படும்.
  • வெளியுறவு அமைச்சகத்தினால் இயக்கப்படும் இந்த மையங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகமானது உதவிகளை வழங்கும்.
  • மத்திய அரசின் ஆதரவு பெற்ற இந்த மையங்களுக்கு நிர்பயா நிதியின் மூலம் நிதி உதவிகள் வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்