மத்திய தொழிற்துறை காவல் படையின் தற்போதைய தலைமை இயக்குநராக பணி புரியும் 1985 ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த (மகாராஷ்டிரா வட்டாரம்) சுபோத் குமார் ஜெய்ஷ்வால் அவர்களை இரண்டு வருட காலத்திற்கு மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநராக மத்திய அரசு நியமித்து உள்ளது.
மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவின் மூலம் அரசு இவரைத் தேர்ந்தெடுத்தது.
இவர்கள் பிரதமர், மக்களவையின் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இவர்கள், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவினால் நியமிக்கப் படுகின்றனர்.
பிரதமர் தலைமையிலான குழுவில், இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா அவர்கள், ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள அதிகாரிகளை மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிப்பதைத் தவிர்க்க கோரி தனது ஆலோசனையை கூறினார்.
இது “சட்டத்தின் அறிக்கை” (Statement of Law) என அழைக்கப்படுகிறது.
இந்தியத் தலைமை நீதிபதியின் படி, இக்குழுவின் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் முறையானது பிற்காலத்தில் சட்டத்தின் ஆய்விற்கு உட்படுத்தப் படுவதைத் தாங்கும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும்.