மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது 9 நாடுகளில் 10 தூதரகத் திட்டங்களின் கீழ் One Stop Centreஎனும் தீர்வு காணும் மையங்களை (One Stop Centre Scheme – OSC) அமைக்க உள்ளது.
இது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காகஅமைக்கப்படும்.
குவைத், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஆகிய ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தீர்வு காணும் மையமானது அமைக்கப் படும்.
சவுதி அரேபியாவில் இரணடு மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் இந்தியா முழுவதும் 300 மையங்கள் அமைக்கப் படும்.
வெளியுறவு அமைச்சகத்தினால் இயக்கப்படும் இந்த மையங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகமானது உதவிகளை வழங்கும்.
மத்திய அரசின் ஆதரவு பெற்ற இந்த மையங்களுக்கு நிர்பயா நிதியின் மூலம் நிதி உதவிகள் வழங்கப் படும்.