பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் “மின்னணு சுகாதார உதவி மற்றும் தொலைதூர ஆலோசனை சேவை” (Services e-Health Assistance & Tele-consultation – SeHAT) எனும் வெளிநோயாளிகள் நல சேவைத் தளம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
ஆயுதப் படைவீரர்களுக்கு தொலைதூர மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக இந்தத் தளமானது தொடங்கப்பட்டுள்ளது.
வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் துறை மருத்துவர்களினால் இந்த சேவையானது வழங்கப்படும்.
இதில் 75 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் காத்திருக்காமல் விரைவில் மருத்துவரை அணுகலாம்.