ஐக்கிய நாடுகள் அமைதி காப்புப் படையினர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக “UNITE AWARE” எனப்படும் கைபேசி தொழில்நுட்ப தளம் ஒன்றினை இந்தியா தொடங்க உள்ளது.
இது 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பினை (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பில் ஒவ்வொரு உறுப்பினர் நாடும் ஒரு மாத காலத்திற்கு வகிக்க இயலும்) இந்தியா ஏற்கும் போது தொடங்கப்படும்.
UNITE AWARE ஆனது நிலப்பரப்பு சார்ந்த தகவல்களை வழங்கி அமைதிகாப்புப் படையினரிடம் சூழ்நிலை குறித்த ஒரு விழிப்புணர்வை அதிகரிக்கும்.