பொது தனியார் கூட்டமைப்பு அடிப்படையிலான முதல் ஆராய்ச்சி உலை
May 30 , 2021 1567 days 635 0
அணுசக்தி துறையானது (Department of Atomic Energy – DAE) பொது–தனியார் கூட்டமைப்பு அடிப்படையிலான நாட்டின் முதல் ஆராய்ச்சி உலை ஒன்றினை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தினால் வடிவமைக்கப்பட உள்ள இந்த ஆராய்ச்சி உலையானது ரேடியோ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்யும்.
இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப் படும் அணுசக்தி மருந்துகளின் விலையானது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணுசக்தித் துறையானது இதற்கான மூலதனத்தை வழங்கி தனது துணை அமைப்பான இந்திய அணுசக்தி கழகத்தின் மூலம் இந்த ஆலையினைக் கட்டமைக்கும்.