தீவிரவாத ஒழிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சந்திப்பு
November 1 , 2022 1116 days 519 0
தீவிரவாத ஒழிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் (UNSC) இரண்டு நாள் சந்திப்பானது, இந்தியாவில் நடைபெற்றது.
பயங்கரவாதிகள் இணையம், புதிய கட்டண முறை மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளைக் கையாள்வதில் இது கவனம் செலுத்தியது.
இந்தச் சந்திப்பின் முக்கிய கருத்துரு, ‘பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்தல்' என்பதாகும்.