துடிப்பான இந்தியா செயலூக்கத் தின திட்டம் (Fit India Active Day Programme)
April 20 , 2020 2079 days 827 0
“ஃபிட் இந்தியா” அல்லது துடிப்பான இந்தியா என்ற ஒரு முதன்மை முயற்சியின் கீழ் இந்திய அரசானது துடிப்பான இந்தியா செயலூக்கத் தின திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆயுஷ் அமைச்சகமானது சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் கூட அவர்கள் உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்வதற்காக வேண்டி இந்த திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் உடல் பயிற்சிகள் மூலம் குடிமக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஃபிட் இந்தியா இயக்கமானது தொடங்கப் பட்டது.
இந்த இயக்கமானது 2019 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுத் தினத்தின் (ஆகஸ்ட் 29) போது தொடங்கப் பட்டது.
புகழ்பெற்ற ஹாக்கி வீரரான தயான் சந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாள் கொண்டாடப் படுகிறது.