அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது ஆரோக்கிய சேது செயலியை முழுமையாக நிறைவு செய்வதற்காகவும், பல்வேறு முயற்சிகளின் தரவுகளை ஒருங்கிணைப்பதற்காகவும், ஒருங்கிணைந்த புவி சார்ந்த தளம் ஒன்றை அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்தத் தளமானது சஹயோக் கைபேசி செயலிப் பயன்பாட்டிலிருந்தும், இணைய வாயில் வழியான இந்திய வரைபடங்களிலிருந்தும் தரவுகளைப் பெறும்.
சமூக ஈடுபாடு மூலம் கோவிட் -19 மீது குறிப்பிட்ட தரவுத் தொகுப்புகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க, இந்திய நில அளவைத் துறையானது “சஹயோக்” என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.