பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கு தங்க நுழைவு இசைவுச் சீட்டு வழங்கப்பட்டது.
10 ஆண்டு காலக் குடியிருப்பு அனுமதியைப் பெற்ற மோகன்லால் மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் இந்தப் பட்டியலில் இவரும் இணைகிறார்.
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு நீண்ட காலக் குடியிருப்பு அனுமதிக்கான புதிய முறையை நடைமுறைப்படுத்தியது.
இது வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு தேசிய ஆதரவாளரின் உதவியின்றி, அவர்களின் வணிகத்தில் 100 சதவீத உரிமையினைப் பெற்று வாழவும், அந்நாட்டில் வேலை செய்யவும் படித்திடவும் வழி வகுக்கிறது.