இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் பெய்த கனமழையால் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, குறைந்தது 1,100 பேர் உயிர் இழந்தனர்.
சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாக அறிவிக்கப் பட்டதுடன், இந்தோனேசியா மிகவும் பாதிக்கப் பட்டதாக உள்ளது.
பருவமழை என்பது இயற்கையான வானிலை நிகழ்வுகள் ஆகும் ஆனால் அவற்றின் விளைவுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடையக் கூடும் என்பதோடுஇது மழை மற்றும் புயல்களின் தீவிரத்தை அதிகரிக்கிறது.
பருவமழை என்பது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக மழைப் பொழிவைக் கொண்டு வரும் பருவகால காற்று வடிவங்கள் ஆகும்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், வெப்பமண்டல புயல்கள் பருவமழையுடன் இணைந்து இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தின.
பூமத்திய ரேகைக்கு சற்று வடக்கே மலாக்கா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தப் பகுதியில் நிகழ்ந்த ஓர் அரிய நிகழ்வு ஆகும்.
கோட்டோ புயல் என்பது வியட்நாமை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது என்ற நிலையில் டிட்வா புயல் இலங்கையைத் தாக்கியது.
வெப்பமண்டலப் புயல்கள் பலத்தக் காற்று மற்றும் மழையுடன் கூடிய சக்திவாய்ந்த சுழலும் புயல்கள் ஆகும்; அவை கரீபியன்/வட அமெரிக்காவில் ஹரிக்கேன் என்றும், கிழக்கு ஆசியாவில் டைபூன்ஸ் என்றும், இந்தியப் பெருங்கடலில் புயல்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.
மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் என்பது இந்தப் புயல்களை மேலும் தீவிரமாக்குவதோடு, அதிக மழைப்பொழிவையும் வலுவான சூறாவளிகளையும் புயல்களையும் உருவாக்குகிறது.