TNPSC Thervupettagam

தெலுங்கனூர் தொல்பொருள் அகழாய்வு

October 12 , 2026 10 days 197 0
  • தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு அருகே உள்ள தெலுங்கனூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் முழுமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இந்த அகழாய்வானது தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1.9 மீட்டர் இரும்பு ஈட்டி, அம்பு முனைகள், கோடரிகள், வாள்கள், குத்துவாள்கள், கத்திகள் மற்றும் இரும்பு ஆணிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.
  • சேதமடையாத கருப்பு-சிவப்பு பானை ஒன்றில் இடமிருந்து வலமாக வரிசைப்படுத்தப்பட்ட ஐந்து கீறல் குறியீடுகள் இருந்தன, இவை ஆரம்பகால எழுத்துமுறை பற்றிய தடயங்களை வழங்கக்கூடும்.
  • தெலுங்கனூர் மற்றும் மாங்காடு தளங்கள் கிமு 1600 முதல் கிமு 1200 காலகட்டத்தைச் சேர்ந்தவை, மேலும் தெலுங்கனூரில் கிடைத்த ஒரு வாள் கிமு 1200 காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்