தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு அருகே உள்ள தெலுங்கனூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் முழுமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த அகழாய்வானது தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1.9 மீட்டர் இரும்பு ஈட்டி, அம்பு முனைகள், கோடரிகள், வாள்கள், குத்துவாள்கள், கத்திகள் மற்றும் இரும்பு ஆணிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.
சேதமடையாத கருப்பு-சிவப்பு பானை ஒன்றில் இடமிருந்து வலமாக வரிசைப்படுத்தப்பட்ட ஐந்து கீறல் குறியீடுகள் இருந்தன, இவை ஆரம்பகால எழுத்துமுறை பற்றிய தடயங்களை வழங்கக்கூடும்.
தெலுங்கனூர் மற்றும் மாங்காடு தளங்கள் கிமு 1600 முதல் கிமு 1200 காலகட்டத்தைச் சேர்ந்தவை, மேலும் தெலுங்கனூரில் கிடைத்த ஒரு வாள் கிமு 1200 காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.