TNPSC Thervupettagam

தெலுங்கனூர் தொல்பொருள் கண்டுபிடிப்பு

October 11 , 2026 11 days 140 0
  • தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு அருகே உள்ள தெலுங்கனூரில் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் ஓர் எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இடமிருந்து வலமாக வரிசைப்படுத்தப்பட்ட ஐந்து குறியீடுகளுடன் கூடிய சேதமடையாத கருப்பு-சிவப்பு நிறக் கிண்ணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட இத்தகைய குறியீடுகளின் மிக நீண்ட தொடராகும்.
  • இரண்டாவது கிண்ணத்தில் அதே ஐந்து குறியீடுகள் வேறு வரிசையில் இடம் பெற்றுள்ளன, இது ஒரு சாத்தியமான ஆரம்பகால எழுத்து முறையை உணர்த்துகிறது.
  • இந்த குறியீடுகள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துக்களின் முந்தைய நிலையைக் குறிப்பதாக அமையலாம்.
  • தெலுங்கனூர் மற்றும் அதன் அருகிலுள்ள மாங்காடு ஆகியன கி.மு. 1600–1200 ஆம் ஆண்டைச் சேர்ந்த இரும்புக்கால தளங்களாகும்; தமிழ்நாட்டின் தளங்களில் உள்ள குறியீட்டு அடையாளங்கள் சிந்து சமவெளித் தளங்களில் காணப்படும் குறியீடுகளுடன் சுமார் 90% ஒற்றுமையைக் காட்டுகின்றன.
  • இரும்பு ஆயுதங்கள், ஒரு பழமையான எஃகு வாள், 1.9 மீட்டர் இரும்பு ஈட்டி மற்றும் இரண்டு நபர்களின் எலும்புக்கூட்டு எச்சங்கள் ஆகியன பிற கண்டுபிடிப்புகளில் அடங்கும்.
  • குழி, கல் அறை, முதுமக்கள் தாழி மற்றும் ஈமப்பேழை ஆகிய நான்கு வகையான அடக்க முறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்