தேசியப் பழங்குடினர் விழாவான “ஆடி மஹோத்ஸவ்” விழாவை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்.
இதை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனம் (TRIFED - Tribal Co-operative Marketing Development Federation Ltd) ஏற்பாடு செய்துள்ளது.
இது பழங்குடியினக் கலாச்சாரம், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
இது 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர முயற்சியாகும்.