மத்திய சுற்றுச்சூழல், வளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் காணொலி முறையில் இந்தச் சோதனைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தச் சோதனைத் திட்டமானது மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்பட இருக்கின்றது.
இது நேரடி முறையிலான காகித அடிப்படையிலான போக்குவரத்தை இணைய வழியிலான போக்குவரத்து அனுமதி முறையின் மூலம் மாற்ற இருக்கின்றது. இது மரம், மூங்கில் மற்றும் சிறு வனப் பொருட்களின் இயக்கத்தை எளிமையாக்க வழிவகை செய்கின்றது.