அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற தேசிய உயிரி மருந்துத் திட்டத்தினை உயிரி தொழில்நுட்பத் துறை (DBT - Department of Biotechnology) தொடங்கியுள்ளது.
இத்திட்டம் இந்தியா முழுவதுமுள்ள வளர்ந்துவரும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உற்பத்திப் பொருட்களின் ஆரம்பகால உற்பத்தி நிலையில் ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்வதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தேசிய உயிரி மருந்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மேம்பட்ட தொழில் மற்றும் கல்விக்கிடையேயான இணைப்பிற்கு உதவுவதன் மூலம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது.
இத்திட்டம் கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கு வழிகாட்டுதலையும் பயிற்சியையும் வழங்குகிறது.